Menu

St. Mary's ITI

தோற்றம் & வளர்ச்சி 

பெல்ஜியம் நாட்டிலிருந்து மறை பணியாற்ற வந்த அருட்திரு ஆர்.ஹச். மிசோத் அடிகளார் உழவு தொழிலுக்கு பயன்படும் ஏர்கலப்பை, மண்வெட்டி, வண்டி, மரசாமான்கள் செய்வதற்கு ஏதுவாக தச்சு வேலை செய்யும் தொழிற்பிரிவை 20 மாணவர்களைக் கொண்டு 08.12.1914ல் தொடங்கி இத்தொழிற் கல்வி நிறுவனத்துக்கு சென்னை அரசாங்கத்தின் அங்கீகாரத்தை 14.01.1917ல் பெற்றார்.

1921ஆம் ஆண்டில் மேனாட்டுக் கட்டடக்கலை நுணுக்கத்துடன் அழகிய கோவில் ஒன்றையும் எழுப்பினார்.

அதே ஆண்டில் 05.11.1921ஆம் நாள் கொல்லு பயிற்சி பிரிவுக்கு சென்னை அரசாங்கத்திடம் அங்கீகாரம் பெற்றார்.

1965 ஆம் ஆண்டு பிட்டர், வெல்டர், மோட்டார் மெக்கானிக் தொழிற்பிரிவுகள் மாநில அரசின் அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்டு, 1982 ஆம் ஆண்டு பிட்டர், வெல்டர் தொழிற்பிரிவுகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் பெறப்பட்டது. 

1985ஆம் ஆண்டு  மாநில அங்கீகாரத்தில் இருந்த மோட்டார் மெக்கானிக் பிரிவு மத்திய அரசின் அங்கீகாரம் பெறப்பட்டது. 1988ஆம் ஆண்டு எலக்ட்ரீசியன் பிரிவு மாநில அரசின் அங்கீகாரத்துடன் தொடங்கப்பட்டு, 1988ஆம் ஆண்டே மத்திய அரசின் அங்கீகாரம் பெறப்பட்டது. 

1991ஆம் ஆண்டு ஒயர்மேன், டீசல் மெக்கானிக் ஆகிய புதிய தொழிற்பிரிவுகளும், மோட்டார் மெக்கானிக், எலக்ட்ரீசியன், பிட்டர் ஆகிய பிரிவுகளுக்கு கூடுதல் அலகுகள் துவக்கப்பட்டது. 

இவ்வாறாக 1914ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி இக்கால தேவைக்கேற்ப இயந்திரவியல் நுணுக்கங்களையும், வடிவமைப்புகளையும் பெற்றிருப்பது இந்நிறுவனத்தின் வளர்ச்சியை நமக்கு நினைவூட்டுகிறது.

நிறுவனத்தின் சிறப்பு

நூற்றாண்டு விழா கண்ட இந்த நிறுவனம் பல்வேறு தொழிற்நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் சிறப்பு பயிற்சியளித்து, வேலை வாய்ப்பும் வழங்கி வருகிறது. அதன்படி ஒவ்வோராண்டும் மாணவர்கள் பயிற்சி முடித்து பன்னாட்டு உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு  அனுப்பப்படுகிறார்கள்.
 
உள்ளூரில் அமைந்துள்ள அரசு போக்குவரத்து கழகம், மற்றும் SRVS -Simpsons, Raman & Raman Hero Motots, TVS Dasarathy, Arasu Bajaj, Sakthi Honda போன்ற தனியார் நிறுவனங்களில்  சிறப்பு  பயிற்சிகள் அளிக்க ஆவண செய்யப்படுகிறது.
 
18 வயது நிரம்பிய பயிற்சியாளருக்கு ஓட்டுநர் பயிற்சி உரிமம் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அரசு மானியம் பெறும் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ஊக்கத் தொகை, விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, சீருடை, புத்தகங்கள் மற்றும் இலவச பஸ் பாஸ் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
 
இரண்டு ஆண்டுகளாக வேலை வாய்ப்பு திறன் பயிறசி (Employablity Skills) - பெங்களுர் Skip - Quest Alliance நிறுவனங்கள் உதவியுடன் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
 
கும்பகோணம் ரோட்டரி சங்கங்கள் மூலம் நலத்திட்ட மற்றும் தொழிற்சாலைகளைப் பார்வையிடல் போன்ற தொழிற்சார் உதவிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.  மாணவர்களைச் இரத்த தானம் மற்றும்  சமுதாய பணிகளில் அறிமுகபடுத்துகிறோம்.
 
St. Joseph Offset Press மூலம் அச்சு மற்றும் புத்தகம் பைண்டிங் வேலைகளையும் மாணவர்கள் கற்கலாம்.
 
எமது நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் அரசு, தனியார் நிறுவனங்கள், சுயதொழில் மற்றும் வெளிநாடுகளில் சிறப்புடன் பணி புரிந்து எம் நிலையத்திற்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

குறிக்கோள்

”நிறைவாழ்வை நோக்கி, உழைப்போம், உயர்வோம்”
 
தூய ஆவியானவரின் வழிநடத்துதலின் கீழ் கிறிஸ்து இயேசுவை மையமாகக் கொண்ட ஓர் அமைப்பின் சமூகமே, தூய மரியன்னை தொழிற்பயிற்சி நிலையம். இது அன்பு, உண்மை, நீதி, சுதந்திரம் போன்ற நற்செய்தியின் மதிப்பீடுகளை வாழ முனைகிறது. எல்லோருக்கும் முழுமையான வாழ்வு, மீட்பு என்ற கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தாங்கி குடந்தை மறைமாவட்டதிலுள்ள ஏழை எளிய இளைஞர்களின் நிறைவாழ்வை நோக்கி உழைப்போம் உயர்வோம் பயணத்தைத் தொடர்கிறது.
 
இந்நிறுவனத்தின் பாதுகாவலி , இறை இயேசுவின் அன்னை மரியாளைப் போன்று இங்கு பயிற்சிபெறும் இளைஞர்கள் மறறும் இளம் பெண்கள் இறை ஞானத்திலும், அறிவிலும், தொழிலிலும், பண்பிலும், நாள்தோறும் வளர்ந்து நிறைவாழ்வை நோக்கி பயணம் செய்து, தனக்கும், குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நற்பணியாற்ற தங்களையே உருவாக்கி கொள்ள வழிகாட்டுவதே இந்நிலையத்தின் உயரிய குறிக்கோள்.

ADDRESS

St. Mary's Private  ITI
Near Naal Road
Kumbakonam 612001
Tamilnadu
INDIA 

 

தூய மரியன்னை தொழிற்பயிற்சி நிலையம்
நால்  ரோடு அருகில்
காந்தி நகர்
கும்பகோணம் 612001 
இந்தியா 

 

Tel.                       : +91 435 2900193
Correspondent : +91 94439 74101
Principal              : +91 94896 84429
WhatsApp no  : +91 73970 68252
Email:  info@stmarysiti.in    
             stmarysiti@gmail.com

MAP

FACULTY

Name of the StaffQualificationDesignation   Trade
Fr. S. Lourdusamy                       Correspondent 
Mr. A. Jude ParkerM.E.Principal cum Instructor
Mr. A. John KennedyD.E.E.E.InstructorElectrician
Mr. B.E.InstructorElectrician
Mr. N. SureshD.M.E.InstructorFitter
Mr. A. Antony DossNTC, NACInstructorFitter
Mr. D. ArockiasamyD.E.C.E.InstructorEng. Drawing
Mr. Kavimani WilliamD.M.E.InstructorMech. (M.V)
Mr.  InstructorMech. (M.V)
Ms. K. SushmithaB.E.InstructorWireman
   
Mr. S. Joseph RayarNTC., NACInstructorWelder
Mr. N. MuruganandamNTC,  NACInstructorMech. (DIESEL)
Mr. I.P. SamyM.Com..M.Ed.InstructorEmployability Skills
Ms. V. SuryaB.E.InstructorWorkshop Calculation
    
Mr. G. JayaramanNTC, CTI, M.A.InstructorEng. Drawing
Mrs. Vishalatchi ClerkOffice Staff
Mr. A.Alan RoachI.S.C. TTC.Office StaffOffice Staff
    
    

ITI Blog

Excerpts - Diocese Golden Jubilee Ed.

Theory & Practical

Feedback & Suggessions