Menu

St. Mary's Industrial Training Institute

Prayers

பயிற்சி தொடங்கும் முன் செபம்

இறைவா! உண்மையின் ஒளியே!
அறிவின் ஊற்றே! ஞானத்தின் சிகரமே!
உழைப்பின் உறுதியே! நாங்கள் கற்பதை!
செய்யும் தொழிலை, உமது பாதத்தில்
அர்ப்பணிக்கிறோம்,ஆசிர் அளியும். 
புத்திக்கு ஒளியும், மனத்திற்கு உறுதியும்,
ஞாபக சக்திக்குத் திடனும், உடலுக்கு வலிமையும்  அளித்தருளும்,

உம்மை என்றும் நாட அருள் தருவீர்.

பயிற்சி முடிவில் செபம்

இறைவா! உண்மையின் ஒளியே!
அறிவின் ஊற்றே! ஞானத்தின் சிகரமே!
உழைப்பின் உறுதியே! நாங்கள் கற்றதை!
செய்த தொழிலை,  சிற்ப்புடன் ஆற்ற
உதவியமைக்கு நன்றி - எங்கள்
வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்த அருள் தாரும். 

MECHANIC - கம்மியர்

இயங்கும் உடைமைகள் பழுதுபட்டால் அவற்றைச் சீர்திருத்தித் தருபவர்களிடம் கொண்டு செல்கிறோம். சீர்திருத்தித் தருபவர்களை “மெக்கானிக்” (MECHANIC) என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

யார் இந்த “மெக்கானிக்” ? பழுது நீக்கித் தரும் அளவுக்குத் ”தொழில் நுட்ப அறிவு” பெற்றவர். 

முற்காலத்தில் “தொழில் நுட்ப அறிவுத்திறன் பெற்றவர் ” எல்லோருமே ‘”கம்மியர்” என்று தான் அழைக்கப்பட்டனர். 
இக்காலத்தில் “தொழில் நுட்ப அறிவுத் திறன்” பெற்றவர்கள் மட்டும் அல்லாமல், அதைப் பயன்படுத்திப் பழுது நீக்கித் தரும் தொழில் செய்பவர்களும் “மெக்கானிக்” என்று தான் சான்றோர்களால் அழைக்கப்படுகிறார்கள்.

ஆனால் மேலோட்டமாகப் பார்க்கும் போது “பழுது நீக்கித் தருபவர்” மட்டுமே, பெரும்பான்மை மக்களால் “மெக்கானிக்’ என அறியப்படுகிறார்.

“கை வல் கம்மியன் கவின் பெறப் புனைந்த....” என்பது நெடுநல் வாடை பாடல் வரிகளின் ஒரு பகுதி (வரி;57).

“சிறியரும் பெரியரும் கம்மியர்குழீஇ.....” என்பது மதுரைக் காஞ்சி என்னும் பழந்தமிழ் இலக்கியம் உரைக்கும் காட்சி. 

“கம்மியம்” தெரிந்த வகுப்பினர் என்ற பொருளில் பிற்காலத்தில் ஒரு பிரிவு மக்கள் “கம்மாளர்” என்று அழைக்கப்பட்டனர். 

இஃது எப்படி ஆயினும், முற்காலத்தில் “தொழில் நுட்ப அறிவுத் திறன்” பெற்றிருந்த மக்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாக இருந்த “கம்மியர்” என்பதை, மீண்டும்உயிர்ப்பித்து நடைமுறைக்குக் கொண்டு வரலாமே ! 

சில அரசுத் துறைகளில் ”கம்மியர்” என்ற சொல் புழக்கத்திற்கு வந்திருப்பதையும் கருத்திற் கொண்டு “கம்மியர்” என்ற சொல்லை “மெக்கானிக்” என்பதற்கு இணையான சொல்லாக ஏற்போம் ! 

“கம்மியர்” என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போம் !
====================================================================

MECHANIC....................................= கம்மியர்
MOTOR MECHANIC....................= இயக்கூர்திக் கம்மியர்
INSTRUMENT MECHANIC........= கருவிக் கம்மியர்
RADIO MECHANIC.....................= வானொலிக் கம்மியர்
T.V. MECHANIC...........................= தொலைக் காட்சிக் கம்மியர்
DIESEL MECHANIC....................= தீசல் கம்மியர்
MECHANISM................................= கம்மியம்
MECHANICAL ENGINEERING= பொறியியல் கம்மியம்
=======================================================================
”DIESEL என்பது அறிவியலாளரின் பெயர். டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்தவர். எனவே அவர் பெயர் ”தீசல்” என தமிழ்ப் பண்புகளுக்கு ஏற்பச் சற்று மாற்றப்பட்டுள்ளது.

நன்றி - http://thamizhppanimanram.blogspot.in/2015/12/mechanic_16.html?spref=bl

Rules and Regulations

பொது ஒழுங்கு முறைகள்

  1. தொழில் பயிற்சி நிலைய நேரம்:           முற்பகல் : 8.50 - 12.45   பிற்பகல் : 1.30 -4.45
  2. பயிற்சியாளர் ஒவ்வொரு நாளும் பயிற்சி நிலைய சீருடை மற்றும் அடையாள அட்டையுடன்தான் வருதல் வேண்டும். சீருடையை எக்காரணத்தைக் கொண்டும் வகுப்பறையில் மாற்றுதல் கூடாது.
  3. ஒவ்வொரு பயிற்சியாளரும் தன்னுடைய கையேட்டை நன்முறையில் பாதுகாத்து நாள்தோறும் தவறாமல் பயிற்சி நிலையத்திற்கு கொண்டு வருதல் வேண்டும்.
  4. மணியடிக்கப்பட்டதும் பயிற்சியாளர், குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் அமைதியாக இருத்தல் வேண்டும்.
  5. வாரத்தின் எல்லா நாட்களிலும் காலை, பொது இறை வேண்டலுக்கு அவரவர் பிரிவு வாரியாக கலை அரங்கிற்கு முன் கூடுதல் வேண்டும். பிற்பகல் வேளையில் அவரவர் வகுப்பில் இருத்தல் வேண்டும். காலை பொது இறை வேண்டல் நேரத்தில் அமைதி காப்பதும் இறை வேண்டலை பக்தியோடு சொல்வதும், இந்திய குடிமக்கள் என்ற நிலையில் நாட்டிற்கு மரியாதை காட்ட வேண்டும்.  ஒவ்வொரு நாளும் காலை வேண்டலின் போதும், இறுதி வேண்டலின் போதும் அமைதி காப்பதும், ஈடுபாட்டோடு கலந்துகொள்வதும் பயிற்சியாளர்களின் கடமையாகும்.
  6. அவரவர் உடமைகளை அவரவர் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகம் பொறுப்பாகாது.
  7. பயிற்சி நிலையத்தை கலைக்கோயிலாகக் கருதி அதன் அழகு மாசுபடாமல் காக்க வேண்டியது பயிற்சியாளரின் கடமை. நிலையத்தின் சுவர், தரை, மேசை போன்றவைகள் மீது எழுதுவது, கிறுக்குவது, அவைகளுக்கு சேதம் விளைவிப்பது கூடாது.
  8. தாளாளரின் அனுமதியின்றி எவரும் எதன் பொருட்டும் பணம் பெறுதலோ, அபராதம் விதித்தலோ கூடாது.
  9. பயிற்சிக்கு ஒழுங்காக வராமை, பணிவின்மை, தகாத நடத்தை, குடிப்பழக்கம், போதைப் பொருள் பயன்படுத்தல், புகைப்பிடித்தல், பயிற்றுநர்களிடம் மரியாதைக் குறைவாக நடத்தல் போன்ற ஒழுக்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடும் பயிற்சியாளரை பயிற்சியிலிருந்து நீக்க இவை போதுமான காரணமாகும்.
  10. பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான பொருட்களைத் திருடுவது தண்டணைக்குரிய குற்றமாகும். திருடப்பட்ட பொருட்களின் தொகையோடு அபராதத் தொகையையும் தாளாளரின் முடிவின்படி வசூலிக்கப்படும். பயிற்சியாளரும் பயிற்சியிலிருந்து நீக்கப்படுவார்.
  11. பயிற்சி நிலையத்திற்கு எதிராக கிளர்ச்சிகளில் ஈடுபட்டு அதன் நலனுக்கும் நடைமுறைக்கும் இடையூறாக இருக்கும் பயிற்சியாளர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பயிற்சியிலிருந்து நீக்கப்படுவார்.
  12. வீட்டிலிருந்து வரும் பயிற்சியாளர்கள் வழியில் பேருந்து நிறுத்தம், வளாக வாசல் போன்ற இடங்களில் நின்று கொண்டு தொழிற்பயிற்சி நிறுவனத்தின் நற்பெயர், பெருமை மற்றும் செயல்திறன் இவற்றிற்கு இழுக்கு ஏற்படும்படி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  13. பயிற்சியாளர் எக்காரணம் கொண்டும் தங்கள் கையேடு புத்தகத்திலோ, வருகைப் பதிவிலோ எத்தகைய திருத்தமும் செய்யக்கூடாது. பெற்றோரின் கையயாப்பம் பெறவேண்டிய இடத்தில் பெற்றோரிடமிருந்து மட்டும் தான் பெறவேண்டும்.
  14. அலைபேசி வளாகத்தினுள் பயன்படுத்த அனுமதியில்லை.
  15. வளாகத்தினுள் புகை மற்றும் போதைப் பொருள்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
  16. பயிற்சியாளர் மேற்கொள்ள வேண்டிய நெறி முறைகள் அனைத்தும் இவண் குறிக்கப்பட வில்லை என்றாலும் பயிற்சியாளர் தங்களுக்கும் இப்பள்ளிக்கும் பெருமைதரக் கூடிய ஒழுக்க நெறிகளைக் கடைபித்து வாழ்வில் உயர்வார்களாக.

வருகைப் பதிவும், விடுப்பும்

  1. வருகைப் பதிவு 80%க்குக் குறைவாக இருந்தால், தேர்விற்கு எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்பது அரசு ஆணை.
  2. முன் அனுமதியின்றி தொடர்ந்து தொழிற்பள்ளிக்கு வராதோர் முன் அறிவிப்பின்றி பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவர்.
  3. பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கையயாப்பமின்றி வரும் விடுமுறை படிவங்களுக்கு அனுமதி கிடையாது. தகுந்த காரணம் இருந்தால் மட்டுமே விடுப்பு அனுமதிக்கப்படும். எதிர்பாராத சமயங்களில் எடுக்கப்படும் விடுப்பு அஞ்சல் வழியாக அனுப்பவேண்டும்.
  4. உடல்நலக் குறைவினால் பயிற்சிக்கு வராதோர், மருத்துவ சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும்.
  5. பயிற்சி நிலையத்திற்கு வராத, மற்றும், தாமதமாக வருபவர்கள் முதல்வரைச் சந்தித்து கையேட்டில் கையயாப்பம் பெற்ற பின்புதான் வகுப்பறைக்குள் நுழைய வேண்டும்.
  6. ஒவ்வொரு பாடவேளையிலும் வருகைப் பதிவு எடுக்கப்படும். ஒரு பாடவேளைக்கு வருகை தராத பயிற்சியாளர் அன்று விடுப்பு எடுத்தவராகவே கருதப்படுவார்.

வகுப்பறை ஒழுங்கு முறைகள்

  1. பயிற்சி நிலைய நேரத்தில் பயிற்றுநரின் அனுமதியின்றி வெளியில் செல்லுதல் கூடாது.
  2. பயிற்சியாளர் பயிற்சி நேரத்தில் தங்களைப் பார்த்து பேச வருபர்களிடம் பேச பொதுவாக அனுமதி இல்லை.
  3. பயிற்றுநர்கள் (அ) பெரியோர்கள் வகுப்பறையில் நுழையும்போது எழுந்து நின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.
  4. ஒரு பாடவேளை முடிந்து அடுத்த பாடவேளை தொடங்கும் இடைவெளிகளில் பயிற்சியாளர்கள் அமைதிகாத்தல் அவசியம். இவ்வேளைகளில் பயிற்சியாளர்களின் தலைவன் வகுப்பை கவனித்துக் கொள்ள வேண்டும்.

பணிமனை ஒழுங்கு முறைகள்

  1. பணிமனைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
  2. எந்த பயிற்சியாளரும் பயிற்றுநரின் அனுமதி பெறாமல் எச்சாதனத்தையும் அல்லது இயந்திரத்தையும் இயக்கக் கூடாது.
  3. சிறு மின்சாரக் கோளாறு ஏற்பட்டாலும் உடனே மின்னியல் பயிற்றுநர்க்குத் தெரிவித்து, கோளாரை சரி செய்யும் வரை இயந்திரங்களை இயக்கக் கூடாது.
  4. பணிமனையில் படுத்துறங்கும் பழக்கம், இயந்திரங்கள் மற்றும் வேலை செய்யும் மேசையின் மீது அமர்தல் கூடாது. உடல்நிலை சரியில்லாத போது பயிற்றுநரின் அனுமதி பெற்று அதற்குரிய இடத்தில் ஓய்வெடுத்தல் வேண்டும்.
  5. பயிற்சியார்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான பொருட்களை வெளியில் கொண்டு செல்வதோ அல்லது வெளிப்பொருட்களை உள்ளே கொண்டு வருவதோ கூடாது.
  6. பயிற்சியாளருக்கென்று கொடுக்கப்பட்ட கருவிகள் (Tools) மற்றும் இதர பொருட்களை பயிற்சிகாலம் முடிந்து செல்லும் போது திருப்பித்தர வேண்டும்.

தேர்வு

  1. ஒவ்வொரு மாதமும் இறுதி வாரத்தில் மாதத் தேர்வுகள் நடைபெறும்.
  2. பயிற்சியாளர் தேர்வில் பெறும் மதிப்பெண், காலம் தவறாமை, சீருடை போன்ற விபரங்களின் அடிப்படையில் (Sectional Mark) வழங்கப்படும்.
  3. பள்ளியில் நடக்கும் தேர்வுகளில் காப்பி அடிப்பதோ, காப்பி அடிப்பதற்கு உதவுவதோ கூடாது. அவ்வாறு செய்வது கண்டறியப்பட்டால் அப்பயிற்சியாளர் பயிற்சியிலிருந்து நீக்கப்பட அதுவே போதுமான காரணமாகும்.
  4. பயிற்சியாளர் தேர்ச்சிபெற ஒவ்வொரு பாடத்திலும் 60% மதிப்பெண் பெறவேண்டும்.

பொதுக்கருவிகள் காப்பகம்.

  1. எந்த பயிற்சியாளரும் பொதுக்கருவி காப்பகத்தினுள் செல்லக்கூடாது.
  2. ஒவ்வொரு நாளும் தேவையான பொதுக்கருவிகளை பயிற்றுநரின் அனுமதியோடு காப்பகத்தில் உள்ள காப்பாளரிடம் பெற்று பயன்படுத்தி வகுப்பு முடிவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் பெதுக்கருவி காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.
  3. காப்பகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் சேர்ப்பிக்கப்படாமலோ அல்லது தொலைக்கப்பட்டாலோ பயிற்சியாளரே அந்த இழப்புக்கு ஈடு செய்ய வேண்டும்.

பெற்றோரின் கவனத்திற்கு

  1. பெற்றோர்  தாளாளர், முதல்வர், பயிற்றுநரை சந்தித்து கையேட்டை பரிசோதித்து பார்த்து தங்கள் பிள்ளைகளின்  தரம், நடத்தை இவற்றை அறிந்து குறைகள் இருப்பின் அவற்றை களைய முயற்சி எடுக்க வேண்டும். ஆண்டிற்கு மூன்று முறையாவது பெற்றோர்கள் தாளாளரை சந்திக்க வேண்டும்.
  2. ஒவ்வொரு மாதமும் பெற்றோர்க்கு பயிற்சியாளரின் முன்னேற்ற அறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது. மதிப்பெண்களை நன்கு கவனித்து குறைந்த மதிப்பெண் பெற்ற பாடத்தில் அதிக மதிப்பெண் பெற உதவ வேண்டும்.
  3. வகுப்பு நேரங்களில் மாணவர்களைத் தொலைப்பேசியில் அழைக்கக் கூடாது.

கட்டுப்பாட்டு நெறிமுறைகள்

  1. குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனைத்தீர்ப்பு பெற்ற எந்தப் பயிற்சியாளரும் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் படிக்க அனுமதிக்கப்பட மாட்டார்.
  2. கட்சி, அரசியல், வகுப்புவாத செயல்பாடுகளிலும் ஈடுபடுகின்ற அல்லது சக பயிற்சியாளர்களை ஈடுபடுத்துகின்ற பயிற்சியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவர்.
  3. ராக்கிங் கண்டிப்புடன் தடை செய்யப்படுகிறது. இக்குற்றத்தில் ஈடுபடும் பயிற்சியாளர்கள் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவர்.

உறுதிமொழி

தூய மரியன்னை தொழிற்பயிற்சி நிலையத்தின் நெறிமுறைகளை படித்து அறிந்து கொண்டேன். என்னுடைய வளர்ச்சிக்காகவும், தொழிற்பயிற்சி நிலையத்தின் பெருமைக்காகவும் இந்நெறி முறைகளை கடைபிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

Search

Archive

Guestbook
Please add a comment below