பயிற்சி தொடங்கும் முன் செபம்
இறைவா! உண்மையின் ஒளியே!
அறிவின் ஊற்றே! ஞானத்தின் சிகரமே!
உழைப்பின் உறுதியே! நாங்கள் கற்பதை!
செய்யும் தொழிலை, உமது பாதத்தில்
அர்ப்பணிக்கிறோம்,ஆசிர் அளியும்.
புத்திக்கு ஒளியும், மனத்திற்கு உறுதியும்,
ஞாபக சக்திக்குத் திடனும், உடலுக்கு வலிமையும் அளித்தருளும்,
உம்மை என்றும் நாட அருள் தருவீர்.
பயிற்சி முடிவில் செபம்
இறைவா! உண்மையின் ஒளியே!
அறிவின் ஊற்றே! ஞானத்தின் சிகரமே!
உழைப்பின் உறுதியே! நாங்கள் கற்றதை!
செய்த தொழிலை, சிற்ப்புடன் ஆற்ற
உதவியமைக்கு நன்றி - எங்கள்
வாழ்க்கையில் அவற்றைப் பயன்படுத்த அருள் தாரும்.